ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் மயூர் என்ற 6 வயது ஆண் குழந்தை, நேற்று மாலை, குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து மற்ற சிறுவர்கள், மயூரின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ரேவா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறுகையில், “ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.







