தென்பெண்ணை ஆற்றில் மிதந்த 2 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்… தந்தையே வீசிச்சென்ற கொடூரம்!

தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மிதந்த சம்பத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் துணி சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம்…

The bodies of 2 young children who floated in the Tenpenna river... the brutality of the father!

தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மிதந்த சம்பத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் துணி சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதந்தது. இதனைக் கவனித்த பொதுமக்கள் உடனடியாக புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, மேலும் அதிர்ச்சி தரக்கூடிய விதமாக அந்த குழந்தையின் சடலத்தின் அருகே மற்றொரு குழந்தையின் சடலமும் கிடந்தது. இதனையடுத்து, 2 குழந்தையின் உடல்களும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமின் உத்தரவின் பேரில் இரண்டு குழந்தைகளையும் உயிருடன் ஆற்றில் வீசினார்களா? அல்லது கொலை செய்து வீசானார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரபாகரன் – ஜெயபிரியா தம்பதிக்கு நேற்று முன்தினம் (டிச.14) இரட்டை குழந்தைகள் பெண் குழந்தைகள் பிறந்தது. எதிர்பாராத விதமாக 2 குழந்தைகளும் நேற்று (டிச.15) இரவு அடுத்தடுத்து உயிரிழந்தது.

இந்த நிலையில் பிரபாகரன் தனது மனைவி ஜெயபிரியாவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், பிரபாகரன் குழந்தைகளை முறையாக அடக்கம் செய்யாமல் ஆற்றில் வீசி சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தையே தனது குழந்தைகளை ஆற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.