பிறந்த நாளுக்கு கிடைத்த சிறந்த பரிசு – சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தனது தந்தை மற்றும் கைக்குழந்தை இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என தெரிவித்துள்ளார்.   நடிகர்…

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தனது தந்தை மற்றும் கைக்குழந்தை இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று சௌந்தர்யா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தந்தை ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், தனது பிறந்த நாளின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டள்ளார். அதில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கையில் தனது கைக் குழந்தையை வைத்திருப்பது போன்றும், பின்னால் நடிகர் ரஜினிகாந்த் நிற்பது போன்றும் உள்ளது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு அதில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ‘கடவுள் எனக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு மிகச் சிறந்த பரிசாக வீர் பாப்பாவை கொடுத்துள்ளதாகவும் அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கடவுளின் குழந்தை என் பின்னால் இருப்பதாகவும் அவரது உண்மையான ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.