முக்கியச் செய்திகள் தமிழகம்

கலைஞர் நூலகம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவுறும்!

மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை புது நத்தம் சாலையில் 6 அடுக்குகளைக் கொண்ட நூலக கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், கட்டிடத்திற்கு ரூ.99 கோடியும், புத்தகம் வாங்குவதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கபட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கலைஞர் நினைவை போற்றும் வகையில் 4000 ஆய்வு அறிக்கைகள், புத்தகங்கள் அடங்கிய கலைஞரின் ஆய்வகம் என்ற தனிப்பிரிவு அமைக்க திட்டமிடபட்டுள்ளது. மேலும் போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 3000 புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவு, இது தவிர அரசியல், சுற்றுலா, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட 36 வகையான நூலக பிரிவுகள் செயல்படும்.

இந்தக் கலைஞர் நினைவு நூலகத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வங்க முடிவு செய்யபட்டுள்ளது. கலைஞர் நினைவு நூலகத்தில் வைக்க உள்ள புத்தகங்களை தேர்வு செய்வதற்கு மூத்த கல்வியாளர்கள் மற்றும் பொது நூலக அதிகாரிகள் தலைமையில் நிபுணர் குழு அமைக்கபட்டுள்ளது.

மேலும் நிபுணர் குழு தேர்வு செய்து வழங்கும் பட்டியலின் அடிப்படையில் புத்தகங்களை வாங்க ஒப்பந்த பள்ளி வெளியிடபடும். இதுமட்டும் இல்லாமல் டிசம்பர் மாத இறுதிக்குள் கலைஞர் நினைவு நூலக பணிகள் 100 சதவீதம் நிறைவடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மனைவி மீது சந்தேகம் ; பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை

EZHILARASAN D

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!!

Jeni

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்

Yuthi