முக்கியச் செய்திகள்உலகம்தொழில்நுட்பம்செய்திகள்

2004ல் பேஸ்புக்கின் வருகையும்… அமெரிக்க தேர்தல் பிரச்சாரமும்…

2004ல் பேஸ்புக் முதல் முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. அது அமெரிக்க அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 200வருடத்திற்கும் மேலான பாரம்பரியம் உண்டு. அமெரிக்காவின் முதல் அதிபர் தேர்தல் 1789ல் நடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் மட்டுமல்ல ஜனநாயகம், மக்களாட்சி, மதச்சார்பின்மை, பாலியல் சமத்துவம், சமத்துவம் போன்ற எல்லாவற்றிற்கும் முன்னோடியாக அமெரிக்காவின் சட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. இவை வெறுமனே சாதாரணமாக நடந்துவிடவும் இல்லை. இதற்கு பின்னர் பெரிய போராட்டங்களும் இணைந்தேதான் இத்தகைய மிகப் பழமையான ஜனநாயக நாடாக அவை உருவெடுத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்க சமூகம் புதிய திட்டங்களையோ அல்லது நவீன பிரச்னைகளையோ எளிதில் உள்வாங்கிக் கொள்வதைப் போலத்தான் தொழில்நுட்பங்களையும் மிக எளிதாகவும் அதன் தொடக்க காலத்திலும் உள்வாங்கி கொண்டது. அதனால்தான் அவர்களால் 1996லேயே இணையதள பிரச்சாரமும், ஆன்லைன் நிதி திரட்டலும் சாத்தியமாயிற்று. சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஓரிடத்தில் மக்களை அணிதிரட்ட முடியும் என்றால் அதில் என்ன ஆச்சரியம் என கேள்விதானே எழும். ஆனால் அவற்றை 2002ல் சாத்தியமாக்கியது அமெரிக்கர்கள்தான். 2000த்தின் துவக்கத்தில் இந்தியாவில் நோகியா போன்ற மொபைல் போன்கள் வரத் தொடங்கியிருந்தாலும் அவை பணக்காரர்கள் அல்லது வசதி படைத்தவர்கள் புழங்கும் ஒரு சாதனமாக இருந்தது.

பேஸ்புக்கின் வருகை :

ஃபேஸ்புக் என்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்களுக்கு சொந்தமான ஒரு சமூக வலைதளமாகும். 2004 ஆம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது ஹார்வர்ட் பல்கலைக்கழக நண்பர்களான எட்வர்டோ சவெரின் , ஆண்ட்ரூ மெக்கோலம் , டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூஸ் ஆகியோர் இணைந்து பேஸ்புக்கை உருவாக்கினார்கள். பேஸ்புக் எனும் சொல்லை மார்க் ஜுக்கர்பர்க் தலைமையிலான மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களால் வெளியிடப்பட்ட தனிநபர்களின் குறிப்புகளில் இருந்து எடுத்துக் கொண்டனர். அதாவது அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் தனிநபர் தகவல்கள், குறிப்புகள் , புகைப்படங்கள் அடங்கிய Directory ஐ ஒவ்வொரு வருடமும் வெளியிடும். அதற்கு பேஸ்புக் என பெயர் வைத்திருந்தனர். அதுமிகவும் பிரபலமாக அறியப்படவே புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வலைதளத்திற்கு பேஸ்புக் என பெயர் வைத்துவிட்டனர் .

பேஸ்புக்கில் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பத்தில் ஹார்வர்ட் மாணவர்களிடையே மட்டுமே அதிகமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற வட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் விரிவடைந்தது. 2006 ஆம் ஆண்டு முதல், Facebook ஆனது 13 வயது முதல் (அல்லது அதற்கு மேற்பட்ட வயது வரை) அனைவரும் பயன்படுத்தும் ஒரு வலைதளமாக மாறியது. உலகம் முழுக்க பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.5பில்லியன் அளவை கடந்துள்ளதாக புள்ளிவிவரம் சொல்கிறது. அவற்றில் இந்தியாவில்தான் அதிகமாக பேஸ்புக் பயன்பாடு உள்ளது. கிட்டத்தட்ட 315 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

 பேஸ்புக்கும் , அமெரிக்க தேர்தல் பிரச்சாரமும் :

பேஸ்புக் உருவான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் அரங்கில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு கருவியாக மாறியது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாணவர் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்கும் மாணவர்கள் தங்கள் பிரச்சாரங்களுக்காகவும், விளம்பரங்களை செய்வதற்காகவும் பேஸ்புக் குழுக்களை உருவாக்கினர்.

இதேபோல 2006 ஆம் ஆண்டில், பேஸ்புக் நிறுவனம் பல்வேறு தேர்தல் தொடர்பான குழுக்களை உருவாக்கியது. அந்த குழுக்களில் ” வரக்கூடிய தேர்தல் சுதந்திரமான, தடையற்ற மற்றும் கருத்துக்களை திணிக்கக்கூடாத ஒன்றாக இருக்க வேண்டும். அவைதான் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது” என்று ஒரு பதிவு வெளியிட்டு தேர்தல்களின் Pulseகளை தெரிந்து கொள்ளும் விதமாக வாக்களிக்கும் வலைப்பதிவு இடுகையை வெளியிட்டது. மேலும் அந்த பதிவில் எத்தனை பயனர்கள் தங்கள் சுயவிவரங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள் என்பதையும் பட்டியலிட்டது.

2006 தேர்தல்களுக்குப் பிறகு, பேஸ்புக் அதன் தேர்தல் தளங்களை மறுவடிவமைத்தது, அனைத்து கட்சியினரும் தங்களது தனிப்பட்ட சுயவிவரங்களை நிறுவ அனுமதிக்கும் வகையில் அதன் தளங்களை வடிவமைத்தது.  இதன் மூலம் தேர்தல்கள் குறித்து கருத்துக் கணிப்புகள் அல்லது தேர்தல்கள் கள நிலவரங்களின் நாடித் துடிப்பை ஆராய்வதற்கு அது உதவியாக அமைந்தது.

ஜனநாயக கட்சியின் வேட்பாளரானபாரக்  ஒபாமாவிற்கு 2007  டிசம்பர் மாதத்த்தில் 172,205 பின் தொடர்பவர்கள் மட்டுமே இருந்தனர். ஜனவரி 2008 முதல் வாரத்தில்,  லோவா காக்கஸ் தேர்தல்களில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஒபாமாவிற்கு பேஸ்புக்கில் 205,872 ஆதரவாளர்கள் மளமளவென அதிகரித்தனர்.

இதன் அடிப்படையில் தேர்தல்களில் பிரச்சாரங்கள் செய்வதற்கும், கருத்துக் கணிப்புகள் நடத்துவதற்கும், இணையதள போஸ்டர்கள் , விளம்பரங்கள் செய்வதற்கும் பேஸ்புக் முக்கிய கருவியாக செயல்பட்டது. மேலும் மக்கள் தங்களது கலை, இசை, அரசியல், இலக்கியம், செயல்பாடுகள் ஆகிய சுய விவரக் குறிப்புகளை தங்களது பக்கங்களில் தெரிவித்திருப்பதால் வேட்பாளர்களுக்கு வாக்களர்களின் மனநிலை, எண்ண ஓட்டங்களை அடிப்படையாக கொண்டு அதற்கேற்ப பிரச்சாரங்களை மேற்கொள்ள பேஸ்புக் பயன்பட்டது என்றால் அது மிகையல்ல.

-அகமது AQ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் – குவியும் பாராட்டு

G SaravanaKumar

மருத்துவர்கள் போராட்டம்; டெல்லி போலீசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

Halley Karthik

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய் யானை..! 2 மாத குட்டியானை நடத்திய பாசப்போராட்டம்..!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading