MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கா அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் அவகாசம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
MBBS, BDS படிப்புகளில் சேர இதுவரை 38,912 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர 21,659 பேரும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் சேர 12,689 பேரும் என்று 34,348 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்களும் வரும் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் http://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.