துல்கர் சல்மானின் புதிய படத்தில் இணைந்த நடிகை கயாடு லோஹர்…!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தில் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர், காந்தா ஆகிய திரைப்படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து ‘ஐ அம் கேம்’ என்ற படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இத்திரைப்படத்தில் கதிர், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கினும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மானின் ‘வே பாரர்’ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அய்யப்பனும் கோஷியும், நரிவேட்டா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளரான ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார். இச்செய்தியை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.