கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக
தொல்லியல்த் துறை தொடங்கவுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 9 ஆம் கட்ட
அகழாய்வு பணிகள் எப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அகழாய்வு பணிகளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் 9ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம்
வரை நடைபெற உள்ளது. கீழடியில் 110 ஏக்கர் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ஆம்
ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் 3 கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறையும், அடுத்த 5 கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையும் நடத்தியுள்ளது. கீழடியுடன் கங்கைகொண்ட சோழபுரம், பட்டறைப்பெரும்புதுார், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கீழ்நமண்டி,
பூதிநத்தம், பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளது.








