32.7 C
Chennai
May 13, 2024
இந்தியா செய்திகள் சினிமா

“அனிமல்” திரைப்படத்தின் 8 நாள் வசூல் இவ்வளவு கோடியா? 

“அனிமல்” திரைப்படத்தின் 8 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது.  பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,  ராஷ்மிகா  மந்தனா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.  படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திரைப்படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது.  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஜப்பானில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு தடை!

முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்தது.  திருவிழா அல்லாத நாட்களில் வெளியாகி இவ்வளவு வசூலித்த படங்களில் இதுதான் முதன்முறை என்று படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  இந்த திரைப்படம் 2-வது நாளில் ரூ.236 கோடியும் 3-வது நாளில் ரூ. 356 கோடியும் வசூலித்துள்ளது.  இதனை பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி என படக்குழு வர்ணித்தது.

நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை “கிளாசிக்” என்று புகழ்ந்துள்ளார்.  ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 8-வது நாளின் முடிவில் ரூ.600. 67 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading