“#TVK கொள்கைப் பாடலுக்கு இசையமைக்க என்னை நம்பியதற்கு நன்றி” – தெருக்குரல் அறிவு!

இசையமைப்பாளரும், பாடகருமான ‘தெருக்குரல்’ அறிவு தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின்…

இசையமைப்பாளரும், பாடகருமான ‘தெருக்குரல்’ அறிவு தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் அறிமுக பாடல், கொடியை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். தொடர்ந்து தவெகவின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைப்பெற்றது. இதில் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

இந்த கொள்கைப் பாடலுக்கு ராப் பாடகர் அறிவு இசையமைத்திருந்தார். இந்நிலையில் கட்சியின் கொள்கைப் பாடலுக்கு இசையமைக்க தனக்கு வாய்ப்பளித்ததற்கு விஜய்க்கு நன்றி என தெருக்குரல் அறிவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

“ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு “இதை செய்ய உன்னால் மட்டுமே முடியும்!” என அவர் கூறினார். தவெகவின் கொள்கைப் பாடலுக்கு இசையமைக்க என்னை நம்பியதற்கு நன்றி விஜய் சார். உங்கள் குரலை பதிவு செய்தது என்னுடைய வாழ்வின் மறக்க முடியாத நினைவாக இருக்கும். உங்களுடைய அரசியல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்” என தெருக்குரல் அறிவு குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.