தஞ்சாவூர் : வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட பட்டதாரி இளைஞர்

தஞ்சாவூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து, தன்னை தானே தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள…

தஞ்சாவூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து, தன்னை தானே தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் எம்எஸ்சி பிஎட் எம்பில் வரை
படித்துள்ளார். இவர் குரூப் 2 தேர்வு எழுதி மதிப்பெண் குறைந்துவிட்ட மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என வீட்டில் கூறி வந்த மணிகண்டன், வேலை கிடைக்கவில்லையே என விரக்தி அடைந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை வீட்டின் மாடியில் விஷம் குடித்ததோடு, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.

இதில் அவர் உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரை மாய்த்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உயிரிழப்பு என்பது எதற்கும் தீர்வாகாது என்பதை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வு முன்னெடுப்புகளை நடத்தி வருகிறது. யாரும் உயிரிழப்பு எண்ணத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்..

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.