நெதர்லாந்தில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் உணவகத்தில் ’தல’ தோனியின் ஜெர்சி – இணையத்தில் வைரல்!

நெதர்லாந்தில் உள்ள தனது உணவகத்தில் தோனியின் ஜெர்சியை ஃபிரேம் செய்து மாட்டியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும்…

நெதர்லாந்தில் உள்ள தனது உணவகத்தில் தோனியின் ஜெர்சியை ஃபிரேம் செய்து மாட்டியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையேயான உறவைப் பற்றி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரும் ரசிகர்களால் ‘தல’ என்றும் ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்பட்டனர்.

தோனி கேப்டனாக இருக்கும் வரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தேவையான அனைத்து பொறுப்புகளையும் தோளில் சுமந்த ரெய்னா அவருக்குப் பின்னால் நின்றது தெரிந்ததே. 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உறுப்பினரான ரெய்னா தனது வாழ்க்கையில் 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தனக்கு பிடித்த வீரர் தோனியை மைதானத்தில் பின்தொடரும் ரெய்னா, அதே முக்கியத்துவத்தை விளையாட்டிலிருந்து விடைபெறுவதிலும் காட்டினார். 2019 ODI உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு அணியில் இருந்து விலகியிருந்த தோனி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தோனியிடமிருந்து இந்த செய்தி வெளிவந்தவுடன், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இதுவரை மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்ட ர்ரெனா 5528 ரன்களை குவித்து ஐபிஎல் தொடரின் அனுபவம் மிக்க வீரராக கருதப்படுகிறார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் ரெய்னா, தற்போது மற்ற நடவடிக்கைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் ரெய்னா, நெதர்லாந்தில் உள்ள தனது ”ரெய்னா இந்திய உணவகம்” என்ற பெயரிடப்பட்டுள்ள உணவகத்தில் தோனியின் ஜெர்சியை ஃபிரேம் செய்து வைத்துள்ளார். இதனால், ரெய்னாவின் உணவகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.