சென்னையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பார்த்த தோனி! – சத்யம் தியேட்டரை சூழ்ந்த ரசிகர்கள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பார்க்க கிரிக்கெட் வீரர் தோனி வந்ததால், ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பார்க்க கிரிக்கெட் வீரர் தோனி வந்ததால், ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை மறுநாள் (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இதையும் படியுங்கள் : ரயிலில் பிறந்த பெண் குழந்தை… ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்…

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் சிஎஸ்கே அணி வீரர்கள் தங்கியிருக்கும் நிலையில், மகேந்திர சிங் தோனி மற்றும் தீபக் சாஹர் நேற்றிரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

தோனியும் தீபக் சாஹரும் இரவில் படம் பார்த்துவிட்டு வெளியேறும் போது, திரையரங்கில் குவிந்திருந்த ரசிகர்கள்,  ‘தல தோனி, தல தோனி’ என கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/pudiharicharan/status/1771770008714248502?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1771770008714248502%7Ctwgr%5E63f592e82a88bac4163184a2a5aabb177d902d3b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fpudiharicharan%2Fstatus%2F1771770008714248502%3Fref_src%3Dtwsrc5Etfw

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.