முக்கியச் செய்திகள் விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; தொடரை இழந்தது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பின்ஷிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வெற்றி பெற்றது.

செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா முதல் முறையாக வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது.

செஞ்சூரியனில் வீழ்த்தப்பட்ட தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ் பெர்க்கில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் இந்நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றதில்லை.

இதனையடுத்து கேப்டவுனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கும் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

அடுத்து இரண்டாவது இன்னிங்கிஸ்சில் இந்தியா 198 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா அணியின் பேட்டிங் பயங்கர சொதப்பல். பண்ட் மட்டும் 139 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இவருக்கு அடுத்து அதிகபட்ச ரன் 29 மட்டுமே. இப்படி கோலி அவுட் ஆக மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்மிழந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

டெஸ்ட் தொடர்களில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அந்த தொடரை இந்தியா கைப்பற்றாமல் இருந்ததில்லை. இதற்கு முன்னர் கடைசியாக 2012-2013ல் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை முதல் போட்டியில் இந்தியா வீழ்த்தியது. ஆனால் தொடரை கைப்பற்றாமல் தோல்வியுற்றது. இதனையடுத்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றாமல் வெளியேறியுள்ளது என கிரிக்கெட் ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

டெஸ்ட் போட்டியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிடின் பயிற்சி அணியின் மீது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் வீரர்களின் செயல்பாடு மிக மோசமாக வெளியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்த அளவில் முதல் போட்டியில் அணி தோல்வியை தழுவியவுடன் அணியின் நட்சத்திர வீரரான் டீகாக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும் ரபாடா, ஆலிவர், இங்கிடி மற்றும் ஜேஸன் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு இந்தியாவை வெற்றிகொள்ள உதவியது.

கடந்த காலங்களில் இந்திய அணிக்குள் சில சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையில் இனியாவது அடுத்தடுத்த போட்டிகளில் அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்ப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் சாம்பின்ஷிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா 5வது இடத்தில் பின் தங்கியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

’நிலம் வாங்கணும், வரதட்சணை வாங்கிட்டு வா’: சரமாரி டார்ச்சரால் சட்ட மாணவி தற்கொலை, கணவர் கைது!

Halley Karthik

கேப்டன் வருண் சிங், மாணவர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் வைரல்

Ezhilarasan

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் இரவு ஊரடங்கு!

Halley Karthik