முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியோடு தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டனர். மேலும் அதிக மாடுகளை அடக்கிய கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறப்பான முறையில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதுரை பாலமேட்டில் காலை 8 மணிக்கு ஜல்லிக்காடு போட்டிகள் தொடங்கியது.

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். நேர்மையாக போட்டியில் பங்கேற்ற வேண்டும் என்று மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து உறுதி மொழி ஏற்றனர். காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய 10 பேர் கொண்ட மருத்துவ குழு முன்பே நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் 2 கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா

Ezhilarasan

’பிளே ஆப்’ சுற்று முனைப்பில் சிஎஸ்கே.. ஐதராபாத்துடன் இன்று மோதல்

Halley Karthik

பிலிப்பைன்ஸ் விமான விபத்து: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

Vandhana