முக்கியச் செய்திகள் தமிழகம்

தீவிரவாதம் தலைதூக்கினால் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்: தமிழிசை

தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தாரஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தான் ஆக வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல் பட வேண்டும். கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்து இருக்கின்றது. ஏன், இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். என்.ஐ.ஏ. மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும், கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும்.

கோவையில் நடந்த சம்பவம் முதலில் கார் கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக கூறப்பட்டது. பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். குண்டு வெடித்ததை பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது.

பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கோவை அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறை தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
என்பது தான் விருப்பம் என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்ணன் பட டீசர் வெளியானது!

Niruban Chakkaaravarthi

கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து; 5 பேர் பலி

G SaravanaKumar

சட்டவிரோதமாகக் குற்றம் செய்த கும்பல்

G SaravanaKumar