ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தென்காசி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. கடையநல்லூர் அருகே உள்ள பாம்புகோவில் சந்தையானது மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் உள்ள…

தென்காசி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் களை கட்டியது.

கடையநல்லூர் அருகே உள்ள பாம்புகோவில் சந்தையானது மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் கோடி கணக்கில் விற்பனை நடைபெறும் சந்தைகளில், ஒன்றான பாம்புக்கோயில் ஆட்டுச் சந்தை வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆட்டுச்சந்தையில் நெல்லை, கன்னியாகுமரி விருதுநகர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து இந்த ஆட்டுச் சந்தையில் பங்கேற்று ஆடுகளை போட்டி
போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.

அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த சிறப்பு ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிப்போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வருகின்றனர்.

வெள்ளாடு, செம்மறி ஆடு, மலை ஆடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் தற்போது இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், அதிகளவு வெள்ளாடு மற்றும்
செம்மறி ஆடுகள் விற்பனை ஆகி வருகின்றன.

மேலும், தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

—- சே. அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.