தமிழ் நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த 20-ம் தேதி அரசு டெண்டர் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது.
அரசின் இந்த நடவடிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தூய்மைப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய கோரும் டெண்டரை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது.




