முக்கியச் செய்திகள் விளையாட்டு

3 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், அஸ்வினுக்கு வாய்ப்பில்லை

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள
ஹெட்டிங்லே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றமில்லை.

முந்தைய போட்டியில் ஆடிய வீரர்களே இதிலும் விளையாடுகிறார்கள். சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்து அணியில் டாம் சிப்லேவுக்கு பதிலாக டேவிட் மலான், மார்க் வுட்டுக்கு பதிலாக கிரேக் ஓவர்டான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அணி விவரம்:

இந்தியா: கே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராத் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே,
ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், ஜானி
பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், கிரேக் ஓவர்டான், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

100 ஆண்டு வெற்றிக்காக பணியாற்றுங்கள் :ராஜேந்திர பாலாஜி!

Halley Karthik

தந்தையானார் கோலி!

Niruban Chakkaaravarthi

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி

Arivazhagan CM