நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம்
ரூ.7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ம் தேதி நிதிலை அறிக்கையும், 14ம் தேதி வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று(25ம் தேதி) கூட்டுறவுத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசினார். அப்போது தாய்கோ வங்கி மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வங்கிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போலி நகை மூலம் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 45 வங்கிகளில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.