ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவியை தடுத்த ஆசிரியர்

பள்ளிக்கு வந்த மாணவியிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளி வளாகத்திற்குள் வருமாறு, மாணவி மற்றும் பெற்றோருடன் ஆசிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவியை வகுப்பறையில் நுழையும் முன்பு மாணவர்கள் அவரை…

பள்ளிக்கு வந்த மாணவியிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளி வளாகத்திற்குள் வருமாறு, மாணவி மற்றும் பெற்றோருடன் ஆசிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவியை வகுப்பறையில் நுழையும் முன்பு மாணவர்கள் அவரை எதிர்த்த சம்பவம் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அது தொடர்ந்து கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவம் பேசுபொருளானது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை மாண்டயா மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை ஆசிரியர் ஹிஜாப்பை கழட்டி வைத்துவிட்டு பள்ளி வளாகத்தில் நுழையுமாறு பெண் ஆசிரியர் கூறினார். தொடர்ந்து மாணவியுடன் வந்திருந்த தந்தை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

https://twitter.com/ANI/status/1493094042821087232

இது குறித்து பேசிய அவர், “பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதை அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் பேசியுள்ளோம். மாணவர்களும் வகுப்பறைக்குள் வந்தவுடன் தங்களது ஹிஜாப்பினை கழட்டிவிடுகின்றனர். ஆனால் இன்று என் மகளை பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தார். பள்ளி வளாகத்திற்குள் மாணவியை அனுமதிக்காமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்து சூழ்நிலை பொறுத்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.