முக்கியச் செய்திகள் விளையாட்டு

டாடா ஸ்டீல் செஸ்; உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இதில் 3 சுற்றுகளில் போட்டியை டிரா செய்த பிரக்ஞானந்தா, 4வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை எதிர்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லிரனுக்கு எதிரான 4வது சுற்றில் 73 நகர்த்தல்களின் முடிவில் உலகின் நம்பர் 2 வீரரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 4வது சுற்று முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 4வது இடத்தில் உள்ளார்.மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை அனிஷ் கிரி தோற்கடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் கார்ல்சன் உள்ளார். இதுவரை டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் கிரி வென்றதில்லை.

வரும் வியாழக்கிழமை நடைபெறும் 5வது சுற்றில் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார். ஜனவரி 28 அன்று நடைபெறும் 12வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனுடன் மோதுகிறார். ஜனவரி 29ம் தேதியுடன் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நிறைவு பெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

EZHILARASAN D

சூரிய கிரகணம் – மதுரை மீனாட்சியம்மன் கோயில் கீழ் உள்ள 23 கோயில்களில் நடை அடைப்பு

EZHILARASAN D

ஈரோடு இடைத்தேர்தல்; மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை

Web Editor