சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 13 முதல் 15 தேதி வரை மட்டும் 5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த டிசம்பர் 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைக்காக கோவில் நடை டிசம்பர் 30ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பிறகு மகர விளக்கு பூஜை தொடங்கியது. கடந்த 14 தேதி மகரவிளக்கு பூஜை நடந்து முடிந்துள்ளது. நாளை இரவு 10 மணிவரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர்.
இந்நிலையில் சபரிமலை தேவசம் போர்டுக்கு இம்முறை வரலாறு காணாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி 12ம் தேதி வரை ரூ.310.40 கோடியாக இருந்த வருவாய் ஜனவரி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ரூ.5 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரி 15ம் தேதி வரை 315.46 கோடி ரூபாய் தேவசம்போர்டிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.