விக்ரம் பிறந்த நாளில் தங்கலான் அப்டேட் : மேகிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

நடிகர் விக்ரம் பிறந்த நாளில் தங்கலான் படத்தின் மேகிங் வீடியோவை  படக்குழு வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம்  பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 61வது…

நடிகர் விக்ரம் பிறந்த நாளில் தங்கலான் படத்தின் மேகிங் வீடியோவை  படக்குழு வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம்  பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 61வது படத்திற்கு “தங்கலான்” என பெயரிட்டுள்ளனர்.

கோலார் தங்க சுரங்கத்தினை  மையமாக வைத்து கதைக் களம்  உருவாகி வரும் இந்த படத்தை  ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா மற்றும்  நீலம்  தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும்.  இந்த படத்தில்  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இந்த படம் பேசுகிறது என டீசர் வெளியானபோது சினிமா விமர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதல்  முறையாக விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை விக்ரமின்  பிறந்தநாளான இன்று வெளியிட  உள்ளதாக படக்குழு  ஏற்கனவே அறிவித்திருந்தது. இன்று காலை 09:05 மணிக்கு தங்கலான் படக்குழு படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுடன் மேகிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில்  பா.ரஞ்சித் , விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக கலை  வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். கோலார் தங்கச் சுரங்கம் போல செட்களை அமைத்து படப்பிடிப்பு நடைபெறும் விதமாக இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.