முக்கியச் செய்திகள் தமிழகம்

50% மட்டுமே அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, பேருந்துகள், புறநகர் ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், அடுமனைகள், விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.துணிக்கடைகள், நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கேளிக்கை விடுதிகள் (Clubs) 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் 50 சதவீத பேருடன் இயங்கவும், திரையரங்குகள் அதிகபட்சமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உள்அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடக நிகழ்ச்சிகளில் 50 சதவீத பார்வையாளர்கள் பங்கேற்கவும், அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் கல்வி நிலையங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், மழலையர் பள்ளிகள் (play schools), நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ, துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் வரும் 20-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து பயிற்சி நிலையங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் வரும் 9-ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவு பணிக்கு செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டை, தடுப்பூசி சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், கடைகள், வணிக நிறுவனங்களில், திரையரங்குகளில் பணிபுரியும் பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டீ குடிப்பதால் ஆயுள் அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்

EZHILARASAN D

120 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்?

Web Editor

ரோஹித் புதிய சாதனை – இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா..!

Web Editor