தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைக்கட்டுபடுத்த அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால்…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைக்கட்டுபடுத்த அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால் வைரஸ் பரவல் நவம்பர் மாதத்தில் இருந்து படிப்படியாக குறையத்தொடங்கியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 3290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,92,780ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 18,606 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 1,715 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,61,424 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,750 ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.