பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக…

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக 11-ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று முழு ஊரடங்கு காரணமாக ஏற்கனவே இன்றைய தேதிக்கு முன்பதிவு செய்தவர்கள் பணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 19-ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துக்களுடன் சிறப்பு பேருந்துகள் உட்பட முக்கிய ஊர்களில் 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.