முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் – முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022 – ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன் , ஆர்.கே.சுரேஷ் , கௌரவ திரு ராதாகிருஷ்ணன் பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500 – க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார் . அந்த கடிதம் வாசிக்கப்பட்டது . மேலும் , இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
அதில் குறிப்பிடத்தக்கது

1). தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நன்றியை ஆறுவருடத்திற்கான திரைப்பட விருதுகளை வழங்கிய தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது . மேலும் , நிலுவையில் வருடத்திற்கான விருதுகளுக்கும் குழு அமைத்து விரைவில் வழங்கிடப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2.தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்களை சென்டர்லைஸ் சாவர் மூலம் மானிட்ரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்யத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .

3.அரசு Digital service provider ( QUBE , UFO ) நிறுவனங்கள் அதிகப்படியான தொகையினை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிப்பதைக் கட்டுப்படுத்தி பாதியாகக் குறைத்து வாங்கிடச் செய்யுமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்திட வேண்டுமாய் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .

4.1957 CHENNAI ) 500 000 Tat மானியம் வேண்டி 2015-2016-2017 ஆண்டுகளுக்கு விண்ணப்பித்துள்ள சிறுமுதலீட்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு 7 – லட்சம் மானியத் தொகையினை ரூ .8 – லட்சம் சேர்த்து ரூ .15,00,000 மாக உயர்த்தி தர பொதுக்குழு தமிழக அரசிடம் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறது.

5.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சங்கத் தயாரிப்பாளர்களுக்கு பையனூரில் வழங்கிய 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தரத் தமிழக முதல்வர் தாயுள்ளதோடு பரிசீலித்து உதவிட வேண்டுமாய் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .

6. வர்த்தக சிறுமுதலீட்டுத் திரைப்படங்களை நமது சங்கத்தின் அறக்கட்டளை மூலம் OTT தளத்தில் வெளியீட்டுத் தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழிவகை ஏற்பாடு செய்யப்படும் .

7.திரைப்படங்களின் விமர்சனங்களைப் படம் ரிலீசான தேதியிலிருந்து சமூகவலைத்தளங்கள் 3 – நாட்கள் கழித்து எழுதுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .

8.திரையரங்குகளில் படம் பார்த்த பின் கருத்துக் கேட்பதற்காகக் கொண்டுவரும் . கேமராக்களை திரையரங்குகளின் உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனத் திரையரங்கு உரிமையாளர்களை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .

9. திரைப்படங்களையும் , நடிகர் , நடிகையா உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்தவித பேட்டியும் . திரைத்துறையினர் தருவதைத் தவிர்க்குமாறு இந்தப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது .

10.இனிவரும் காலங்களில் தேர்தல் முடிந்து புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத்தின் காலம் 2 – வருடம் என்பதை மாற்றி 3 – வருடப் பதவிக்காலம் என்று மாற்றி அமைக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை எனவும் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஏற்கனவே தலைவர் , செயலாளர் உள்ளிட்ட பதவிகளிலிருந்திருக்க வேண்டுமெனவும் திருத்தம் மேற்கொண்டு பொதுக்குழுவில் வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுரேஷ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி. உதய குமார் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து கூட்டம் முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”மணிஷ் சிசோடியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்”- சிபிஐ சோதனைக்கு உள்ளானவர் குறித்து கெஜிரிவால் கருத்து

Web Editor

14வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை

Web Editor

திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமையே மொய்விருந்து-அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Editor