முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாநகராட்சியில் 23 நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள்,
நீர்வழிக் கால்வாய்கள் உட்பட 23 நீர்நிலைகளில் 4775 மெட்ரிக் டன் வண்டல்கள்
தூர் வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீரானது மழைநீர் வடிகால்களின் வழியே கொண்டு செல்லப்பட்டு நீர்வழிக் கால்வாய்களின் மூலம் வெளியேற்றப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகள், பொதுப்பணித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மேற்கொள்ள நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய ரொபாடிக் எக்ஸ்கவேட்டர், ஆம்பிபியன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் வழிக் கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளில் 23 நீர்நிலைகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளின் மூலம் 4,775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. 
இந்த நீர்வரத்துக் கால்வாய்கள் செல்லும் முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில்
குறுக்குப் பாலங்கள் (Culvert) உள்ளன. குறிப்பாக மாம்பலம் கால்வாய் செல்லும்
தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலை, விஜயராகவா சாலை. சர்பிட்டி தியாகராய
சாலை, வெங்கட் நாராயணா சாலை, மூப்பாரப்பன் தெரு, சிஐடி நகர் 4வது பிரதான சாலை, தெற்கு உஸ்மான் சாலை, சி.ஐ.டி.நகர் வடக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள
குறுக்குப் பாலங்களின் (Culvert) கீழ்ப்பகுதிகளில் நவீன இயந்திரங்களை கொண்டு
வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளன.

மாம்பலம் கால்வாயில் இதுவரை 750 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் கழிவுகள்
தூர்வாரி அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பருவ மலைக்கு முன்னதாக
தூர்வாரும் பணிகளை முழுவதுமாக முடிக்க மாநகராட்சி திட்டமிட்டு துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என்எஸ்ஜியில் இணைய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

Web Editor

84 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதலமைச்சர்

G SaravanaKumar

ஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!

G SaravanaKumar