முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,872 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 43 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 475 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 83 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 133 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 147 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 180 பேருக்கும் செங்கல்பட்டில் 98 பேருக்கும் ஈரோட்டில் 137 பேருக்கும் சேலத்தில் 113 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

இருசக்கர வாகன பயணியை தடுத்து நிறுத்திய காவலர்! காமிராவில் பதிவான நெகிழ்ச்சி சம்பவம்!

Halley karthi

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை!

Gayathri Venkatesan

நடிகர் விஜய் குடும்பத்தையும் விட்டு வைக்காத மோசடிக் கும்பல்!!

Vandhana