சென்னை விமான நிலையத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் சென்னை விமான நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, விமான நிலையத்தில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும், விமான டிக்கெட்களில் காமராஜர் பெயரை அச்சிட வேண்டும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், சென்னை நாடார் சங்க பேரவை தலைவர் சீனிவாசன், சத்திரியா பாசறை தலைவர் ஆதித்யா சம்பத், நெல்லை – தூத்துகுடி நாடார் பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன் ஆகியோர் சென்னை விமான நிலைய ஆணைய இயக்குநர் சரத்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அண்மைச் செய்தி: ‘நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சீரழித்துவிட்டது’ – எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அப்போது, சென்னை விமானநிலைய இயக்குநர் விரைவில் காமராஜரின் பெயர் பலகையும், படத்தையும் வைப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








