அக்டோபர் 9-ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவை…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது. 2023-24-ம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் அன்றைய தினம் தாக்கல் செய்வார். மேலும் மகளிர்க்கான 33% இடஒதுக்கீடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தை கூட்டுவதற்கு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநர் பணி. அவர் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.