புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் முக்கியம் என தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை மந்தவெளியில் உள்ள தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜுகேஷன் சொசைட்டிசார்பில் ராதா சுவாமி சிறப்பு மையத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ஆளுநர் ரவி, மாணவர்களுக்காக இன்று திறக்கப்பட்டுள்ள இந்த ராதா சுவாமி சிறப்பு மையம் நிச்சயம் சிறந்த எதிர்கால ஆளுமைகளை உருவாக்கும் என்றார்.
மேலும், அண்மையில் வெளிவந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிக்கையின்படி இந்தியாவில்கலை படிப்புகளை சேர்ந்தவர்களே 70% பேர் முதுநிலை படிப்புகளில் உள்ளனர்.அறிவியல் பயிலும் மாணவர்களை விட கலை சார்ந்து படிப்பவர்களே அதிகம் உள்ளனர் தமிழ்நாட்டிலும் இதுவே நிலை.தரமான ஆசிரியர்கள் மிக முக்கியம் என கூறினார்.
அத்துடன், அறிவியல் படிப்புகளை பயிற்றுவிக்க முறையான ஆசிரியர்கள் இல்லாததே அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் பயிலாததற்கு காரணம் என்ற மேலும் அதனை களையும் வகையில் தேசிய கல்விக் கொள்கை நிச்சயம் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என கூறினார்.
மேலும், இந்தியாவை சேர்ந்த பட்டதாரிகள் உலக அளவில் சிறந்த அளவில் பல துறைகளில்
பணியாற்றி வருகின்றனர். ஆனால் புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும்
முக்கியம்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வெளிநாடுகளில் Green Card பெறுவதை
பெருமையாக கருதினர்.அந்த நிலை சற்று தற்போது மாறி வருகிறது. புதிய பாரதத்தை உருவாக்க இந்தியாவில் இருக்க குடிமக்கள் முதலில் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.