தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் உள்பட பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், நாகாலாந்து, பீகார் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மேற்கு வங்கம் – ஆர்.என்.ரவி
தெலுங்கானா – ஷிவ்பிரதாப் சுக்லா
மகாராஷ்டிரா – ஜிஷ்ணு தேவ் வர்மா
நாகாலாந்து – நந்து கிஷோர் யாதவ்
பீகார் – சையத் அடா ஹஸ்னன்
இமாசல பிரதேசம் – கவிந்தர் குப்தா
டெல்லி – தரன்ஜித் சந்து
லடாக் – வினய் குமார் சக்சேனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில் நியமனங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது.







