பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கு இன்று விண்ணப்ப…

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கு இன்று விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும் எனவும் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும், அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.