தமிழ் நாடு அமைச்சரவை விரிவாக்கம்; ஆளுநர் மாளிகையில் நாளை பதவியேற்கும் விழா…!

தமிழ் நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை நடைபெறுகிறது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைத்துள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகவும் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.

தமிழ் நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் மற்​றும் 33 அமைச்​சர்​கள் இடம் பெறலாம். தற்​போது முதலமைச்சர் மற்​றும் 9 அமைச்​சர்​கள் மட்​டுமே உள்​ளனர். அதனால் அமைச்​சரவை விரி​வாக்​கம் செய்​யப்பட வேண்​டிய அவசி​யம் உள்​ளது.

தவெக சார்பில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் முன்மொழியப்பட்டுய்ள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இவ்விழா நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.