ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் முத்து – தேனியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது தேனி அருகே பங்களாமேட்டில்…

Tamil Nadu Army soldier Muthu, who died in Rajasthan, was given a state honour with 21 shells fired in Theni!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

தேனி அருகே பங்களாமேட்டில் நாகராஜ் – இன்பவள்ளி தம்பதியினரின் மகனான ராணுவ வீரர் முத்து (35). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ரீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது

இதனிடையே, கடந்த நவ. 10-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் சிக்கி முத்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக சக ராணுவ வீரர்கள் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் அவரது உடல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் முத்துவின் உடலுக்கு மதுரை மாவட்டம் சார்பாக அரசு மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துவின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு தேனி பங்களாமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டது. பின் அங்கிருந்து ஊர்வலமாக தேனி மின் மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரரின் உடல் அருகே அவரது தாய் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.