செப்.18இல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி தலைமையில் பொதுக்குழு நடைபெற உள்ளது. உதயநிதி உள்ளிட்ட முக்கிய தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளனர். 2020 இல் பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் தற்போது இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளில் திருத்தம் செய்வதற்காக இந்த பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளனர். அவர்கள் ஒப்புதல் பெற்று பல்வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.