முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் நன்றி

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தலைவர் முரளி ராமநாராயணன், செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவினால் கருத்து சுதந்திரம் பறிபோவது இல்லாமல், தயாரிப்பாளர்கள் அதனால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி நேற்றைய தினம் (05.06.21) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தோம்.

பல்வேறு அரசுப் பணிகளுக்கிடையேயும் தமிழ்த் திரையுலகை காத்திட, தயாரிப்பாளர்கள் சங்கம் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடியாக திரையுலகிற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பயணிகள் வருகை குறைவு: ஜூன் 16 வரை மேலும் சில ரயில்கள் ரத்து!

Halley karthi

ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதல்!

Ezhilarasan

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

Saravana Kumar