முக்கியச் செய்திகள் விளையாட்டு

பயிற்சிப் போட்டி: 188 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில், தரவரிசைப் பட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர்-12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 24-ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதற்கு முன் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து அணியுடன் துபாயில் இன்று நடந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஜேசன் ராயும் ஜாஸ் பட்லரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்கள் விக்கெட்டையும் முகமது ஷமி வீழ்த்தினார். ராய் 17 ரன்களுடனும் பட்லர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மலானை ராகுல் சாஹர் 18 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.

பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவும் லிவிங்ஸ்டனும் அதிரடியாக ஆடினர். 36 பந்துகளில் 49 ரன்கள் விளாசிய பேர்ஸ்டோவை, பும்ரா போல்டாக்கினார். லிவிங்ஸ்டன் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் போல்டானார். அடுத்து மொயின் அலி அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் பும்ரா ஒரு விக்கெட்டும் ஷமி 3 விக்கெட்டும் ராகுல் சாகர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். புவனேஷ்குமார், சாஹர் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் விளாசித் தள்ளினர். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. கே.எல்.ராகுலும் இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

Gayathri Venkatesan

இந்திய அணி அபார வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

G SaravanaKumar

“காவல்துறை இருக்கிறதா?”- ஹெச்.ராஜா கேள்வி

Web Editor