டி20 உலக கோப்பை : இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இஷான் கிஷன் டக் அவுட்டாக திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் வெளியேறினார். 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 111 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.