நியூசிலாந்து-இலங்கைக்கு இடையேயான சூப்பர் 12 தகுதி சுற்றில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் (குரூப்1) மோதுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூசிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகிவிடும்.
இலங்கை அணி தனது முதல் டி20 ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கைக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் தோற்றால் ஏறக்குறைய ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டியது வரும்.
இன்றைய நியூசிலாந்து-இலங்கை அணிக்கு எதிரான போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.