7 மாநில இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

உத்தரபிரதேசம், பீகார் உள்பட 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம்…

உத்தரபிரதேசம், பீகார் உள்பட 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி கிழக்கு, பீகாரின் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகள், அரியானாவில் உள்ள ஆதம்பூர் தொகுதி, ஒடிசா மாநிலத்தின் தாம்நகர், உத்தரவிரதேசத்தின் கோலகோகர்நாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முனோகோடே ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடக்க சுற்று வாக்கு எண்ணிக்கை முதல், தொடர்ந்து முன்னிலை வகித்தபடியே காணப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிக வாக்குகளை பெற்று 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். நீலம் தேவி 79,744 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சோனம் தேவி 63,003 வாக்குகள் பெற்றுள்ளார்.

பீகாரில் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் குசும்தேவி 70,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய் வெற்றி பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் அமன்கிரி 1,24,810 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.