டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் 24 ரன்னும், இஷான் கிஷன் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.







