முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

டி20 உலகக் கோப்பை; வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பவுளர்களில் ஒருவனான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில்
ஏற்பட்ட காயம் காரணமாக, நடைபெற்ற முதல் போட்டியில் இருந்து விலகினார். மீதம் உள்ள டி20 போட்டிகளில் அவர் விளையாடுவாரா என எதிர்பார்த்த நிலையில், ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 தொடர் உலக கோப்பையில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கனவே ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியிருந்ததும், தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியதாக கூறப்படுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை கேள்விக் குறியாக்கி உள்ளது. கூடுதலாக ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.

தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து ஜாஸ்பிரித் பும்ரா வெளியேறியதால் அவருக்கு மாற்றும் வீரராக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ஜாஸ்பிரித் பும்ரா விலகினால் அவருக்கு மாற்று வீரராக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson

ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.25 கோடி வசூல்!

திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பரிசீலனை: முதலமைச்சர் ஸ்டாலின்

Halley Karthik