வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திரிணாமூல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதலைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 291 தொகுதிகளில்…

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதலைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 291 தொகுதிகளில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை, மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் 50 தொகுதிகள் பெண்களுக்கும், 42 தொகுதிகள் இஸ்லாமியர்களுக்கும், 79 தொகுதிகள் பட்டியலினத்தவருக்கும், 17 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.