முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் விளையாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என நீச்சல் வீராங்கனை தனுஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் விஜயகுமார் – அருள்ஜோதி தம்பதியின் மகள் தனுஜா. இவர் 5 வயது முதலே பல்வேறு நிச்சல் போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளையும், அமெரிக்காவில்
நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளில் இவர் அகதி என்பதை காரணமாக கூறி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் தன்னை அனுமதிக்க உதவ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், என்னை இப்போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தால் இந்திய அளவில் நடைபெறும்
போட்டிகளிலும் உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளிலும் நான் வெற்றி பெற்று
இந்தியாவிற்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில்
செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.







