31.4 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

கவனம் ஈர்க்கும்“சந்திரமுகி 2” படத்தின் ”ஸ்வகதாஞ்சலி” பாடல் – இணையத்தில் வைரல்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தின் முதல் பாடலான ”ஸ்வகதாஞ்சலி” பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி, ”சந்திரமுகி 2” படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நிலையில், அதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.

அவ்வப்போது படக்குழு இந்த படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று “சந்திரமுகி 2” படத்தின் முதல் பாடலான ”சுவாகதாஞ்சலி” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் ஒரு சில மேக்கிங் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading