டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்திவைப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில்,  அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.  இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம்,  கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து இன்று வெளியேறுவதாக இருந்த நிலையில்,  இந்த திடீர் உத்தரவு வந்துள்ளது. நேற்று விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை 48 மணிநேரம் அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.எ னினும் அதனை நீதிபதி மறுத்து, ஜாமீன் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.