பிரபல பியூட்டி இன்ஃபுளூயன்சர் ஃபரா எல் காதி மாரடைப்பால் மரணம்… சோகத்தில் இணையவாசிகள்!

துனிசியா நாட்டைச் சேர்ந்த பியூட்டி இன்ஃபுளூயன்சர் ஃபரா எல் காதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஐரோப்பிய நாடான மால்டாவிற்கு பிரபல பியூட்டி இன்ஃபுளூயன்சரும், இன்ஸ்டாகிராமருமான ஃபரா எல்…

துனிசியா நாட்டைச் சேர்ந்த பியூட்டி இன்ஃபுளூயன்சர் ஃபரா எல் காதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐரோப்பிய நாடான மால்டாவிற்கு பிரபல பியூட்டி இன்ஃபுளூயன்சரும், இன்ஸ்டாகிராமருமான ஃபரா எல் காதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  துனிசியாவை சேர்ந்த இவர் தனது விடுமுறை நாட்களை மால்டாவில் கொண்டாடி வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

36 வயதே ஆகும் ஃபரா திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களையும், சமூக வலைத்தளப் பக்கங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  காதிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டட வடிவமைப்பாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.  இவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை எனவும்,  உடற்கூராய்வு நடத்தப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவரின் பழைய இன்ஸ்டாகிராம் பதிவுகளில் அவரது ரசிகர்கள் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.